top of page

பண்டைய கால மன்னர்கள் ஆண்மை அதிகரிக்க சாப்பிட்ட உணவுகள்!

  • Megastar Meganathan
  • Feb 1, 2018
  • 2 min read

இன்று முப்பதை தாண்டுவதற்குள் இடுப்பு வலி, இரத்த ஓட்டம் சீரின்மை, நீரிழிவு, உடல் பருமன் போன்றவை ஏற்படுவதால் தான் ஆண்மை குறைபாடு, விறைப்பு தன்மை கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன.

இன்று முப்பதை தாண்டுவதற்குள் இடுப்பு வலி, இரத்த ஓட்டம் சீரின்மை, நீரிழிவு, உடல் பருமன் போன்றவை ஏற்படுவதால் தான் ஆண்மை குறைபாடு, விறைப்பு தன்மை கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன.

இதற்கு தீர்வாக நிவாரணம் தேடி பலரும் ஆங்கில மருந்துகளை தான் நாடி செல்கின்றனர். ஆனால், நமது நாட்டின் உணவு கலச்சாரத்திலேயே இதற்கான தீர்வுகள் இருந்தன என சில பண்டையக் கால குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.

அந்த காலத்தில், வயதான அரசர்கள் இதற்கு எதை தீர்வாக எடுத்துக் கொண்டனர் என்று காண்கையில்... ஒரு சில உணவுகளின் பெயர்கள் தான் குறிப்பிடப்பட்டுள்ளன...

குங்குமப்பூ

குங்குமப்பூ கருவளம் அதிகரிக்க உதவும் சிறந்த உணவுப் பொருள் ஆகும். இது நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்து கருவளத்தை தூண்டுகிறது.

குறிப்பு: குங்குமப்பூவை ஒரு சிட்டகை அளவு எடுத்து, இதமான நீரில் கலந்து, இரவு படுக்க செல்லும் முன் குடிக்க வேண்டும்.

ஷிலாஜித் (Shilajit)!

நோய் எதிர்ப்பு கோளாறு, வயதாகும் போது ஏற்படும் விறைப்பு குறைபாடு, இரத்த ஓட்டம் சீரின்மை போன்றவைக்கு ஷிலாஜித் சிறந்த தீர்வளிக்கும். இது அந்தரங்க உறுப்புகளின் வலுவின்மையை சரிசெய்யும்.

குறிப்பு: ஒரு சிட்டிகை அளவு ஷிலாஜித்தை நெய் அல்லது தேனுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

புளியங்கொட்டை!

புளியங்கொட்டையில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. முக்கியமாக இது விந்தணு எண்ணிக்கை குறைபாடு மற்றும் விறைப்பு தன்மை குறைபாடுகளை போக்கவல்லது.

குறிப்பு: புளியங்கொட்டை பவுடரை பாலில் கலந்து ஒரு நாளுக்கு இரண்டு முறை குடித்து வர வேண்டும்.

அஸ்வகந்தா!

அஸ்வகந்தா வலுவின்மை சரிசெய்யும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும். மேலும், குறைந்த விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.

குறிப்பு: ஒரு டேபிள்ஸ்பூன் அஸ்வகந்தாவை இதமான நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.

நெல்லிக்காய்!

நெல்லிக்காய் சிறுநீர் கோளாறுகள், குறைந்த விந்தணு எண்ணக்கை சரிசெய்யும். மேலும், இது விறைப்பு தன்மை குறைபாட்டையும் சரி செய்யும் என கூறப்படுகிறது.

குறிப்பு: நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் பவுடரை உறங்கும் முன் உட்கொள்ளுங்கள். பிறகு இதமான சூட்டில் பாலை குடித்து வரவும்.

மூக்குரட்டைக்கொடி (Boerhavia Diffusa)

மூக்குரட்டைக்கொடி (போயாரியா டிபியூசாசா) எனும் இந்த தாவரத்தின் இலைகளை வீக்கம், வலி, சளி குறைய பயன்படுத்துகிறார்கள்.

பண்டையக் காலத்தில் இதை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், விறைப்பு தன்மை குறைபாடு நீங்கவும் பயன்படுத்தியுள்ளனர்.

குறிப்பு: அரை டீஸ்பூன் அளவு போயாரியா டிபியூசாசாவை, ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு நாளுக்கு இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்.

மருத்துவர் குறிப்பு!

இவை அனைத்துமே மூலிகை மற்றும் இயற்கை பொருட்கள் தான். ஆயினும், ஒருசில உடல் ஆரோக்கிய குறைபாடுகள் / நோய்கள் உள்ளவர்களுக்கு இது அலர்ஜியாக இருக்கலாம்.

இது ஒவ்வொரு தனி நபரின் ஆரோக்கியம் சார்ந்தும் வேறுபடும். எனவே, இதை பின்பற்றும் முன்னர் மருத்துவர் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது................................................................


 
 
 

Commentaires


Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2023 by Coming Soon Countdown. Proudly created with Wix.com

bottom of page