சிகப்பழகு பெற சூப்பர் டிப்ஸ்… ஒரு பேரிச்சம்பழம் போதும்..
- Megastar Meganathan
- Feb 1, 2018
- 1 min read
வெயிலாலோ மாசுக்களாலோ ஹார்மோன் குறைபாடுகளாலோ நம்முடைய முகம் கருத்துப்போவதுண்டு. அப்படி கருத்துப் போன முகத்துடன் வெளியிடங்களுக்கு ஏதேனும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியுமா?
அதனால் உடனடியாக சிகப்பழகு பெற இனி பார்லரெல்லாம் போக வேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இமீடியட் சிகப்பழகு பெற முடியும். அப்படிப்பட்ட பொருள்களில் ஒன்று தான் பேரிச்சை
சரி. பேரிச்சையை வைத்து எப்படி சிகப்பழகு பெறுவது? இதோ…
தேவையான பொருள்கள்
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1
உலர்ந்த திராட்சை பழம்-10
இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.
பேரிச்சம்பழம்
அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.
20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.




Comments