டயமண்ட் பிஸ்கட் ஒரு பிரபலமான தேநீர் நேரம் அல்லது குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டி உணவு.
- Megastar Meganathan
- Jan 27, 2018
- 1 min read

தேவையான பொருட்கள்
கடலை மாவு – அரை கப்
மைதா மாவு – ஒரு கப்
பச்சரிசி மாவு – ஒரு கப்
சீரகம் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு தேகரண்டி
உப்பு – தேவைகேற்ப
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
ஓமம் – ஒரு டீஸ்பூன்
வெள்ளை எள்ளு – எட்டு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, சீரகம், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், ஓமம், வெள்ளை எள்ளு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து, திக்காக திரட்டி, டைமன்டு வடிவில் சின்ன சின்னதாக வெட்டி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
コメント