top of page

காதலுக்கு வயதில்லை

  • Megastar Meganathan
  • May 2, 2017
  • 2 min read

காதலுக்கு வயது தடையா? அல்லது வயது வித்தியாசம் தடையா? உண்மையில் இவை இரண்டுமே தடையில்லை. ஐம்பதிலும் காதல் வரும், அந்த காதலிலும் இன்பம் வரும். இன்பம் என்பது உடல் இணைவதில் இருப்பதை விட, மனம் இணைவதில் தான் அதிகம் இருக்கிறது.

அழகோ, பணமோ அதிகமாக இருக்கிறது எனில் உங்கள் அந்தஸ்து அல்லது வாழ்க்கை சூழலில் வேண்டுமானால் பெரிய மாற்றம் வரலாம். ஆனால், வாழ்வியலில்? இல்லறத்தில்? எனவே, கிடைத்த இந்த ஓர் மனித பிறவியில் உங்களுக்கு பிடித்த நபருடன் வாழ்வது தான் உத்தமம்.

வயது வித்தியாசம் இருந்தால் மட்டும் தான் பிரச்சனை வருமா என்ன. பிரச்சனைகள் இல்லாத உறவுகளே இவ்வுலகில் இல்லை. மேலும், உறவுகளில் வயது வித்தியாசம் பெரிய பிரச்சனை இல்லை என்பதற்கான காரணங்கள் பற்றி இனிக் காண்போம்…

முதிர்ச்சி தான் முக்கியம்

வயது என்பதை விட, இருவருக்குள்ளும் இருக்கும் மனதளவிலான முதிர்ச்சி தான் உறவை சிறக்க வைக்கிறது. சிலருக்கு 45 வயதிலும் முதிர்ச்சி இருக்காது, சிலர் 25 வயதிலேயே 60 வயது நபருக்கு இருக்கும் முதிர்ச்சியுடன் இருப்பார்கள். எனவே, மகிழ்ச்சியான உறவிற்கு முதிர்ச்சி தான் அவசியம்.

வெறும் எண்ணிக்கை தான்

நமது வாழ்க்கை சிறக்க ஓர் உறுதுணையாக, பக்கபலமாக இருக்க ஓர் அன்பான, அரவணைப்பான காதல் துணை வேண்டும். இதில் வயது வெறும் எண்ணிக்கை தான். காதலுக்கு வயது தேவையில்லை, காமத்திற்கு தான் தேவை.

புரிதல்

உலகை நன்கு அறிந்த ஒரு நபர் உங்கள் துணையாக இருப்பது உங்களுக்கு தானே நல்லது. உண்மையில் இவர்களுடனான உறவில் தான் கிண்டலும், கேலியுமான மகிழ்ச்சியான வாழ்க்கை அதிகமாக இருக்கும்.

அழகு

ஆண்களிடம் அழகு என்பது வயது ஏற, ஏற அதிகரிக்க தான் செய்யும். எனவே, அழகு என்பது இங்கு பெரிய பொருட்டு அல்ல.

வயது வித்தியாசம்

வயது வித்தியாசத்துடன் திருமணம் செய்துக் கொண்டவர்கள் தான் மிகவும் சந்தோசமாக வாழ்க்கையை வாழ்கிறார்கள். உணர்வு ரீதியாக இருபாலரும் ஒரே வயதில், ஒரே அளவில் இருப்பதில்லை என்பது தான் இதற்கான காரணம்.

காதலுக்கு கண்ணில்லை

காதல் என்பது வயதையோ, செல்வத்தையோ பார்த்து வருவது இல்லை. நீங்கள் இவருடன் தான் காதலில் விழ போகிறீர்கள் என தெரிந்தே விழுவதில்லை. எனவே, காதலுக்கு கண் மட்டுமில்ல, வயதும் இல்லை.

பிரச்சனை எங்கு தான் இல்லை

உண்மையில் வயது வித்தியாசம் சண்டைகளை கொண்டு வரும் என்பார்கள். ஆனால், சண்டைகள் இல்லாத இல்லறமே இல்லை. சூழ்நிலைகள் மாறும் போது மனநிலையும் மாற தான் செய்யும். அந்த தருணத்தில் சண்டைகள் எழ தான் செய்யும். இது அனைத்து உறவுகளுக்கும் பொது.

மனிதனாக வளர உதவும்

உண்மையில் உங்கள் உறவில் வயது வித்தியாசம் இருந்தால் தான், தனிப்பட்ட நபராக நீங்கள் உயர முடியும். ஒரே வயதில் திருமணம் செய்வதால் ஈகோவும் உறவோடு சேர்ந்து வளர்கிறது. வயது வித்தியாசத்தில் இந்த ஈகோ மிகவும் குறைவு.

மூன்றாம் நபரின் பேச்சு எதற்கு?

நீங்கள் காதலிக்கும் நபர் என்பவர் உங்கள் வாழ்வுக்குள் இணைய போகும் நபர். எனவே, அவரால் ஏற்படும் தாக்கத்தை பற்றி நீங்கள் மட்டும் தான் சிந்திக்க வேண்டும், முடிவெடுக்க வேண்டும். மூன்றாம் நபர்களின் பேச்சை இதில் நீங்கள் கேட்க அவசியமே இல்லை.

வாழ்க்கை ஒருமுறை தானே

மற்றொரு பிறவி என்பது வெறும் கனவு. கிடைத்த இந்த பிறவியில் உங்களுக்கு பிடித்த நபருடன் நீங்கள் வாழ்வது தான் சிறந்தது. எனவே, கிடைத்த இந்த பிறவியை யாருடன் இருந்தால் சந்தோசமாக இருக்க முடியும் என்று நினைகிறீர்களோ அவருடன் வாழ்வது தான் சிறந்தது.


 
 
 

Comments


Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2023 by Coming Soon Countdown. Proudly created with Wix.com

bottom of page