சவ்சவ் கேசரி
- Megastar Meganathan
- Apr 22, 2017
- 1 min read
என்னென்ன தேவை? சவ்சவ் - 100 கிராம், பாசிப் பருப்பு - 100 கிராம், நெய் - 100 மி.லி., முந்திரி - 25 கிராம், ஏலக்காய் - 2, பால் - 200 மி.லி., பாதாம் - 25 கிராம். எப்படிச் செய்வது? சவ்சவ்வை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் வேக வைத்து மசித்து வைக்கவும். பாசிப் பருப்பை கடாயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். பாலை முக்கால் பாகமாக சுண்டும் வரை காய்ச்சவும். அதில் வறுத்துப் பொடி செய்த பாசிப் பருப்பு பொடியை சேர்த்து நெய் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு சவ்சவ் மசியலை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். நன்கு கெட்டியானதும் வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து ஏலக்காயை பொடித்து தூவி இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

Comments