top of page

படித்ததில் பிடித்தவை

  • Megastar Meganathan
  • Mar 18, 2017
  • 1 min read

#வெளிநாடு செல்ல #தகுதிகள் ;-

மூனுவேளை மூக்குமுட்ட சாப்பிடுவதை நிறுத்தனும்; முதலாவதாய் முக்கால்வாசி சைவத்தை நீ மறக்கனும்!

பெத்த தாயை திட்டாமல்-உன் துணியை நீயே துவைக்கனும்; உப்பு-காரம் தெரியாட்டியும் தினமும் நீயே சமைக்னும்!

அப்பா வந்து எழுப்பாமல் அலாரம் வைத்து உறங்கனும்; அண்ணண் பாக்கெட்டில் எடுக்காமல் சிக்கனமாக இருக்கனும்!

பேண்ட்-சட்டை இல்லைன்னாலும் பெர்முடாஸ்-டிசர்ட் உடுத்தனும்; பேங்க்-ல அக்கவுண்ட் இல்லைன்னாலும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் திறக்கனும்!

அங்கே......

அரபியோட காருக்கு ஆயில் போட்டு துடைக்கனும்; அவனுடைய பிள்ளைக்கு சலாம் போட்டுத் தொலைக்கனும்!

சாதி-மத சேட்டையெல்லாம் ட்ரங்க் பெட்டிக்குள் அடைக்கனும்; நாசாவிலே வேலையென்றாலும் ட்ரம்ப்-க்கு நீ அடங்கனும்!

இந்தி தெரியாமல் போனாலும் இந்தியன் என்றே சொல்லனும்; தமிழன்-ற திமிர் இருந்தாலும் இங்கிலீஷ் கொஞ்சம் பேசனும்!

நண்பர்கள் நிறைய கிடைச்சாலும் நாசூக்காகப் பழகனும்; நல்லவனென்று தெரிஞ்சாலும் கொடுக்கல்-வாங்கலை குறைக்கனும்!

சொந்த-பந்தங்களை நினைக்காமல் பாச-நேசத்தை மறக்கனும்; தலைவலி காய்ச்சல் என்றாலும் தாய் தகப்பனிடம் மறைக்கனும்!

வீடுகட்டி கல்யாணம் கட்ட ஓவர்டைம் பாக்கனும்; மயிர் கொட்டும் கவலையை விட்டு உயிரை மட்டும் காக்கனும்!

மனைவி-மக்கள் நினைவின்றி மகிழ்ச்சியாக இருக்கனும்; மாதமானால் சம்பளத்தை மணிகிராம்-ல் அனுப்பனும்!

வட்டிக்குக் கொடுத்தவனை திட்டிக்கிட்டே உழைக்கனும்; எந்த நாட்டுக்குப் போனாலும்-உன் சொந்த நாட்டை நினைக்கனும்!!!!


 
 
 

Comments


Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2023 by Coming Soon Countdown. Proudly created with Wix.com

bottom of page