top of page

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்

  • Megastar Meganathan
  • Mar 13, 2017
  • 2 min read

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்!

இன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைய வந்துள்ளன. அத்தகைய தொழில்நுட்பங்களை கையாள்வதற்கு பெரியோர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ சிறிய குழந்தைகளுக்கு நிறைய தெரியும். இவை அனைத்திற்கு அறிவுத்திறன் தான் காரணம். தற்போதுள்ள குழந்தைகள் அனைவரும் மிகுந்த புத்திக்கூர்மையுடன் இருக்கின்றனர்.

அவர்களிடம் எந்த ஒரு விஷயத்தை சொன்னாலும், அதை அவர்கள் மறக்காமல் ஞாபகத்துடன் வைத்திருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு உணவையும் பெற்றோர்கள் பார்த்து ஆரோக்கியமானதாக கொடுக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கு எந்த ஒரு மனஅழுத்தமும் இல்லை. ஆனால் பெரியோர்களுக்கு வேலைப்பளுவின் காரணமாக மனதில் அழுத்தம் அதிகரித்து, அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர். இவை அனைத்திற்கும் சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம். எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம்.

அதிலும் அத்தகைய உணவுகளை தினமும் சாப்பிடுவது போர் தான். இருப்பினும் அவற்றை சாப்பிட்டால், நிச்சயம் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். சரி. இப்போது அத்தகைய ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளைப் பார்ப்போமா!!!

மீன்

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. ஏனெனில் மூளையின் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது. மேலும இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக ஹெர்ரிங், சால்மன், சூரை (Tuna), கானாங்கெளுத்தி, பொத்தல், நெத்தலி, மற்றும் மத்தி போன்றவை மிகவும் சிறந்தது.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.

பெர்ரிஸ்

பெர்ரிப் பழங்களில் குவர்செடின் என்னும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் ஃபோட்டோ கெமிக்கல், அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும். அதிலும் சில பெர்ரிப் பழங்களான ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது.

பச்சை இலைக் காய்கறிகள்

பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அவர்கள் சொன்னது பொய்யல்ல உண்மை தான். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

தேன்:

தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

நட்ஸ்:

நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.

பால் பொருட்கள்:

பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இந்த பொருட்களை சாப்பிட்டால், மூளைச் செல்கள் நன்கு செயல்படும். முக்கியமாக தயிரில் அமினோ ஆசிட் தைரோசின் என்னும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது.

தண்ணீர்

மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் தான் உள்ளது. எனவே தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி சாலட் மற்றும் டாப்பிங்கில் அலங்கரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. அவை மூளையின் இயக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ரோஸ்மேரியில் மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன.


 
 
 

Comments


Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2023 by Coming Soon Countdown. Proudly created with Wix.com

bottom of page